என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவன் கடத்தல்"
திருச்சி:
திருச்சி சோமரசம்பேட்டை அல்லித்துறை புது தெருவை சேர்ந்தவர் குணா, ஆட்டோ டிரைவர். இவரது மகன் சுரேந்தர் (வயது 14). இவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை குணா, சுரேந்தரை பள்ளியில் விடுவதற்காக ஆட்டோவில் அழைத்து சென்றார். பள்ளி முன்பு சுரேந்தரை இறக்கி விட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் சுரேந்தர் பள்ளிக்கு செல்லாமல் அவனது நண்பர் கோகுல் வீட்டிற்கு சென்றுள்ளான்.
நாச்சிக்குறிச்சி மாரியம்மன் கோவில் அருகே நடந்து செல்லும் போது திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் சுரேந்தரின் வாயில் துணியை அமுக்கி உய்யக்கொண்டான் வாய்க்கால் பாலம் அருகே உள்ள தென்னை தோப்பிற்கு கடத்தி சென்றுள்ளனர்.
இதனிடையே அந்த வழியாக பொதுமக்கள் சிலர் வரவே, மர்மநபர்கள் அங்குள்ள புதர்பகுதியில் மறைந்து கொண்டனர். இதையடுத்து சுரேந்தர் சுதாரித்து செயல்பட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டான். மேலும் தனது தந்தைக்கு போன் செய்து நடந்த விவரத்தை தெரிவித்துள்ளான். உடனே குணா அங்கு சென்று சுரேந்தரை மீட்டார்.
மேலும் இது குறித்து சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் மர்மகும்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி சென்று விட்டனர். அவர்கள் யார், எதற்காக சுரேந்தரை கடத்தினார்கள், குணாவின் எதிராளிகள் யாராவது இந்த செயலில் ஈடுபட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் பள்ளி மாணவனை மர்மநபர்கள் கடத்தி சென்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி பிடாரி கீழ தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது 37). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அகிலா. இவர்களுக்கு மணிகண்டன்(11) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மணிகண்டன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த நிலையில் நேற்று மாலை மணிகண்டன், பக்கத்து தெருவில் உள்ள ஆசிரியரிடம் டியூசன் படிக்க நடந்து சென்று கொண்டிருந்தான்.
அப்போது ஒரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென, மாணவன் மணிகண்டனை குண்டுக் கட்டாக தூக்கி சென்றனர். பின்னர் அவர்கள் மாணவனின் வாயை பொத்தி, காரில் போட்டு கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடினான். ஆனால் காரில் பின் இருக்கையில் இருந்த 2 பேர், மணிகண்டனை கெட்டியாக பிடித்து கொண்டனர்.
இந்த நிலையில் கார், கொள்ளிடம் முக்கூடம் பகுதியில் சீர்காழி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது காரை ரோட்டோரத்தில் நிறுத்தி, கும்பலை சேர்ந்த ஒருவர் சிறுநீர் கழித்தார்.
அந்த சமயத்தை பயன் படுத்தி மணிகண்டன், திடீரென காரில் இருந்த மற்றொருவரின் கையை கடித்து விட்டு மின்னல் வேகத்தில் காரில் இருந்து தப்பி ஓடினான்.
இதை சற்றும் எதிர் பார்க்காத கடத்தல் கும்பல், தப்பி ஓடிய மணிகண்டனை பிடிக்க விரட்டி சென்றனர்.
ஆனால் மணிகண்டன் சத்தம் போட்டப்படி ரோட்டில் ஓடியதால் கடத்தல் கும்பல் பதட்டம் அடைந்தனர். உடனே சுதாரித்து கொண்ட அவர்கள் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு தப்பி சென்றனர்.
இதையடுத்து கடத்தல் சம்பவம் குறித்து மணிகண்டன், அட்டகுளம் கிராம மக்களிடம் தகவல் தெரிவித்தான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், சீர்காழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து மாணவனை மீட்டு விசாரணை நடத்தினர். மாணவன் போலீசாரிடம் ‘தன்னை கடத்தியவர்கள் 4 பேர் கும்பல்’ என்றும், காரில் செல்லும் போது செல்போனில் தன்னை படம் பிடித்ததாகவும் தெரிவித்தான்.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். பணம் பறிக்கும் நோக்கில் மாணவனை கும்பல் கடத்தி சென்றதா? அல்லது மாணவனே கடத்தல் நாடகம் நடத்துகிறானா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர்:
காட்பாடி விருதம்பட்டு வெண்மணிநகர் மோட்டூரை சேர்ந்த ஒரு மாணவன், விருதம்பட்டு போலீஸ் நிலையம் அருகே உள்ள அரசு நிதியுதவி பெறும் ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு முடித்து விட்டு இந்த கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு செல்கிறார்.
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி இன்று திறக்கப்பட்டதால், அந்த மாணவன் பள்ளிக்கு சென்றான். மாணவனிடம், பெற்றோரை அழைத்து வருமாறு பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், பெற்றோரை அழைத்து வராத மாணவன், பள்ளி அருகே வரும்போது தன்னை காரில் வந்த கும்பல் கடத்தி சென்றதாக கூறினான்.
பழைய பஸ் நிலையம் அருகே கொண்டுச் சென்று தன்னை விடுவித்து விட்டு கடத்தல் கும்பல் தப்பிச் சென்றுவிட்டதாகவும் மாணவன் கூறினார். இதை கேட்டு அதிர்ந்து போன பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக அருகே உள்ள விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு மாணவனை அழைத்துச் சென்றனர்.
மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் மாணவன் முன்னுக்கு பின் முரணமாக பதில் அளித்தான்.
இதனால், மாணவன் கடத்தல் நாடக மாடுகிறாரா? அல்லது உண்மையில் காரில் வந்த கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே மாணவன் கடத்தப்பட்டதாக பரவிய தகவல் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
குத்தாலம்:
குத்தாலம் அருகே உள்ள பெரிய செங்குந்தர் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 45). கொத்தனார். இவரது மனைவி புவனேஷ்வரி (36). இவர்களுடைய மகன் அபினேஷ்வரன் (14). பேரளந்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்நிலையில் நேற்று அபினேஷ்வரன் பள்ளிக்கு டியூசன் சென்றுள்ளான். பின்னர் டியூசன் முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக பேரளந்தூர் பகுதியில் உள்ள கோமல் ரோட்டில் பஸ்சிற்காக காத்திருந்துள்ளான். இதை நோட்டம் விட்டு கொண்டிருந்த 2 நபர்கள் புவனேஷ்வசனிடம் பேச்சு கொடுத்து நாங்கள் உன்னை வீட்டில் விட்டு விடுகிறோம் என்று கூறி அபினேஷ்வரனை மோட்டார் சைக்கிளில் ஏற்றி உள்ளனர். அவர்கள் கூறியதை நம்பி அபினேஷ்வரனும் மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளான்.
உடனே 2 நபர்களும் அவன் வாயை மூடி மயிலாடுதுறை அருகே கொண்டு சென்றுள்ளனர். இதையறிந்த அபினேஷ்வரன் வாயை மூடிய நபர் கையை கடித்து அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளான். அவர்கள் இருவரும் அபினேஷ்வரனை துரத்தியுள்ளனர். பின்னர் மயிலாடுதுறை ரெயில்வே நிலையத்திற்கு சென்றுள்ளான். அங்கு காவலுக்கு நின்று கொண்டிருந்த போலீசார் அபினேஷ்வரன் பதட்டமாக வருவதை பார்த்து அவனை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதைதொடர்ந்து போலீசார் அபினேஷ்வரனை மீட்டு அவனது வீட்டிற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு உதவி மைய அலுவலர் சிவராமன் முன்னிலையில் அபினேஷ்வரனை அவனது தாய் புவனேஷ்வரியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்